60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் கில்லி பட நடிகர்.

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் அவரது அப்பாவாக நடித்து இருந்தார்.

இந்த படம் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. ஏற்கனவே ஒரு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சார்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது இந்த திருமணத்தில் அவரது குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. ரூபாலி கொல்கத்தாவில் பேஷன் டிசைனர் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.