Web Ad 2

அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.

‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினையும் ‘தேன்’ படம் போல திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இயக்குநர் கணேஷ் விநாயக் முடிவு செய்திருக்கிறார்.

’அருள்வான்’, ‘டிமாண்டி காலனி 3’, ‘மை டியர் சிஸ்டர்’ என 3 படங்களை முடித்துவிட்டார் அருள்நிதி. இதில் ‘அருள்வான்’ படத்தின் பணிகள் அனைத்துமே முடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மீதி இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

actor arulnithi in arulvaan movie updates
actor arulnithi in arulvaan movie updates