கஸ்டடி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அரவிந்த்சாமி தனது போஸ்டரை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு போகன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.

அதன் பிறகு தற்போது மீண்டும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் ராஜு என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். இது தொடர்பான போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதனை அரவிந்த்சாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.