actor ajithkumar about bike ride
actor ajithkumar about bike ride

பைக் ரைட் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் அஜித்குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி பைக் ரைடு போவதை வழக்கமாக வைத்துள்ள அஜித் தற்போது அது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அனைவரும் பயணப்பட வேண்டும் இந்த உலகம் பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது. அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஜாதியும் மதமும் இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கும் பல நாடுகளைக் கடந்து பல கலாச்சாரங்களைக் கடந்து பயணப்படும் போது அது உங்களை நல்ல மனிதனாக மாற்றும். பயணப்படுவது ஒரு கற்றல் முறை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.