பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளர் ஒருவர் வைல்ட் கார்ட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Abishek Raja ReEntry in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டவர் அபிஷேக் ராஜா.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

தொடர்ந்து மக்களிடம் தன்னுடைய முதல் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என திட்டம் போட்டு இவர் இந்த மூன்று வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதனை வைத்துதான் தான் அனைத்து வேலைகளையும் செய்ததாக இவரே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

Santhanam படத்துல நடிச்சதை விட சிரிச்சது தான் அதிகம் – M.S.Bhaskar Funny Speech.! | Sabhaapathy | HD

ஆனால் இவருடைய செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மாறாக அவர் மீது வெறுப்பு மட்டுமே உண்டானது. இதனால் அவர் வெகு விரைவில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் தற்போது இவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் வேண்டாம் என வெளியேற்றிய ஒருவரை மீண்டும் எப்படி அனுப்பலாம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் உள்ளே சென்றார். அவரைப்போலவே மீண்டும் அபிஷேக் ராஜா உள்ளே அனுப்பப்பட உள்ளார். அதற்கான வாய்ப்புகளும் அதிகம் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் சொல்லப்பட்டு வருகிறது.