நடு ரோட்டில் டான்ஸ் ஆடி சிவராத்திரியை கொண்டாடியுள்ளார் பிக் பாஸ் அபிராமி.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கியவர் அபிராமி வெங்கடாசலம். அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த சிவராத்திரி விழாவிற்கு காலஸ்திரி கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு கோவில் திருவிழாவில் பேண்ட் வாத்தியத்திற்கு நடுரோட்டில் ஆட்டம் போட்டு சிவராத்திரியை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/Cozd2ibsSGA/?igshid=YmMyMTA2M2Y=