விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

Web Ads

திரையரங்கில் வரவேற்பு பெறாத சில படங்கள் ஓடிடி.யில் வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நம்பிக்கையில் ஆர்யன் படக்குழு தற்போது எதிர்நோக்கியுள்ளது.

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது.

Web Ad 2

தற்போது வருகிற 28-ந்தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால், ஓடிடியில் நல்ல வரவேற்பினை பெறும் என படக்குழுவினர் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கருணாகரன் உள்பட பலர் விஷ்ணு விஷாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

aaryan movie releasing in ott on november 28
aaryan movie releasing in ott on november 28