Aarav in Udhayanidhi Movie

உதயநிதி படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரவ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aarav in Udhayanidhi Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் திருச்சி மற்றும் அது சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தற்போது இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக நடிகர் ஆரவ் ராஜபீமா மற்றும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.