அஜித்துடன் இணைவதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துபோக அவர் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை உறுதி செய்யும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கவர் புகைப்படத்தில் அஜித்தின் கண்ணை செட் செய்து மறைமுகமாக அறிவித்துள்ளார்.விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.