பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்தின் பாடலை பாடினால் பரிசு வழங்கப்படுவதாக நடிகை திரிஷாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக்குழு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான அகநக பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இப்பாடல் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடலை உங்கள் வர்ஷனில் பாடி #AganagaCoverContest! என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடும் நபர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது என்று நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார். அதன் வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.