இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகத்தில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முதலில் தல அஜித் நடித்த ‘தீனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதில் கிடைத்த வெற்றி தொடர்ந்து தளபதி விஜயுடன் கூட்டணி வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற மாசான ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்ததாக நடிகர் சூர்யாவின் கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் இருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கதை ஒரு மும்பை நிறுவனத்தின் கதை என்றும் சிம்பு இந்த படத்தில் தொழிலதிபராக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முதல் முறையாக நடிக்க உள்ளார் என்பதால் இப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவலால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.