‘பராசக்தி’ பட டிரெய்லரில் பேரறிஞர் அண்ணா கதாபாத்திரம், வைரல்..

Web Ads

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இச்சூழலில் நேற்று வெளியான டிரெய்லர் உணர்த்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமையும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.

அவ்வகையில், வெளியான படத்தின் டிரெய்லரும் அதனை உறுதி செய்துள்ளது.
1960 காலக்கட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்ட வரலாறுகளை தனது கற்பனையுடன் கலந்து ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளதாக டிரெய்லர் மூலமாக உறுதியாகியுள்ளது.

அதேபோல் நடிகர் சேத்தன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக அமைந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவாக அவர் இப்படத்தில் நடித்துள்ளது டிரெய்லரில் தெரிய வந்துள்ளது.

Web Ad 2

அவரிடம் போலீசார் ஒருவர் இதன் பின்னணியில் நீங்கள் தான் இருக்கிறீர்களா? என்று விசாரணை செய்ய, இல்லை. இதை பண்ணது யாராக இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி என சேத்தன் பதில் அளிக்கிறார். இந்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நிஜமாகவே இந்த வசனம் அண்ணா பேசியதாகவும், சேத்தனின் லுக் அப்படியே அண்ணாவாக பொருந்துவதாகவும் இணையத்தில் பல பதிவுகள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

sivakarthikeyan in parasakthi movie triler viral
sivakarthikeyan in parasakthi movie triler viral