‘நாய்சேகர்’ பட இயக்குநர் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றி அப்டேட்..

சசிகுமார், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோரை தொடர்ந்து இதோ ஓர் ஹீரோ.
‘நாய் சேகர்’ படத்தை இயக்கியவரும், கோமாளி, ‘கைதி, விஐபி 2, இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி நாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில், ‘கொட்டுக்காளி’ பட நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். படம் பற்றி கிஷோர் ராஜ்குமார் தெரிவிக்கையில்,
‘காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. ‘ஃபீல் குட்’ உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல, இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும்.
ஜோடிப் பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி’ என்றார்.
