சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேச்சு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Kamal Haasan talks about acting in cinema
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் பட குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அதாவது அவர் சினிமா பொழுதுபோக்கு அல்ல என்றும், அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்றும் கூறியுள்ளார்.இது மட்டுமில்லாமல் கதைகள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்யவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த பொறுப்பிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது அது அணையும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kamal Haasan talks about acting in cinema
