நார்மல் செக்அப்தான்; அஜித் மருத்துவமனையில் அனுமதி..

Web Ads

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே அஜித்துக்கு, கடந்த ஜனவரியில், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றிருந்த அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘விரைவில் மீடியாவை சந்திப்பேன்’ என்றும் கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில், சென்னை திரும்பிய நிலையில் இன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அஜித். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உடல்நல பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நார்மல் செக் அப் தான் என்றும், மற்றபடி எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறப்படுகிறது.

நேற்று சென்னை விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கியபோது அவருக்கு காலில் லேசாக காயம் ஏற்பட்டதால், அதற்காக பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.

ajithkumar admitted in chennai apollo hospital
ajithkumar admitted in chennai apollo hospital