உங்கள் ஆதரவு இல்லாமல், நான் இருக்க முடியாது : நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி..

Web Ads

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படம் குறித்து சிம்ரன் தெரிவித்த தகவல்கள் காண்போம்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘டூரிஸ் ஃபேமிலி’. இப்படத்தில் யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசரைப் போலவே டிரெய்லரும் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களமாக, இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பித்து வரும் ஒரு குடும்பம், இங்கே சட்டத்துக்குப் புறம்பாக குடியேறுகிறது. அதனால், ஏற்படும் பிரச்சினைகளையும் அதனை அந்த குடும்பம் கையாளும் விதத்தையும் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சி பார்த்த இயக்குனர் ரத்னகுமார், தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை எழுதியுள்ளார். மேலும், படம் குறித்து பேசிய நடிகை சிம்ரன்,

‘இந்த படம் முழுவதும் குடும்பங்களுக்காக உருவாக்கிய படம். அதிக நகைச்சுவையுடன் சிறப்பாக இருக்கும் . உங்கள் ஆதரவு இல்லாமல் நான் இங்க இருக்க முடியாது . உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி . அனைவரும் திரையில் மே 1 அன்று படம் பாருங்கள்’ என பேசியுள்ளார்

family film focus actress simran discusses new release
family film focus actress simran discusses new release

.