கலகலன்னு ஹாரர்..திகிலான ஹியூமர்.. தெறிக்கவிடும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர்..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வருகிற மே மாதம் 16ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த டைலரில் மிரட்டலான ஹாரர் சீன்களும், மொட்டை ராஜேந்திரனின் காமெடி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் யாஷிகா ஆனந்த் உயிரின் உயிரே பாடலை ரீ கிரியேட் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது என்றே சொல்லலாம். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.
Gala gala nu Horror 👹 Dhigilaana Humour 🤩#DevilsDoubleNextLevel Trailer is here bros!
▶️ https://t.co/WfF5HJQsJnIn Cinemas May 16#DevilsDoubleNextLevelFromMay16 @arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar… pic.twitter.com/ugjFSam985
— Santhanam (@iamsanthanam) April 30, 2025