சுதந்திர நாட்டில், பிரபலங்களுக்கு சுதந்திரம் இல்லைதான். சாமான்ய மனிதர்களைப் போல எங்கும் எப்போதும் நடந்து செல்ல.!

பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பதை போல, சுற்றி வளைத்து திணறடித்து விடுகிறார்கள். இதில், மீடியாவும் விதி விலக்கல்ல.! சரி, இப்ப எதுக்கு இந்த முன்னுரைன்னா..

இயக்குனர் சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் அஜீத்-ஷாலினி இருவரும் ரீலுக்காக காதலித்தனர். பின்னர், ரியலாகவே காதலித்து வாழ்வில் இணைந்தனர் என்ற ‘தல’ வரலாறு தெரிந்ததே.

தற்போது, ‘தல’ அஜித்குமாரின் தெறிக்க விடும் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ திரைப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் ‘விடாமுயற்சி’ படத்தை வெளியிட திட்டம். இதுதவிர, அஜித் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.

இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரசன்னாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது ஸ்பெயினில் நடத்தி வருகின்றனர். இதற்காக, அஜித் தன்னுடைய குடும்பத்தோடு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ஷூட்டிங் தவிர ஓய்வு நேரங்களில் ஜாலியாக பேமிலியோடு அவுட்டிங் சென்று வருகிறார்.

அஜித்தின் மகன் ஆத்விக் தீவிர கால்பந்து விளையாட்டு ரசிகர் என்பதால், ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை ஷாலினியுடன் சென்று கண்டுகளித்துள்ளார் ஆத்விக்.

நடிகர், நடிகைகள் பெரிதும் விரும்புவது சாதாரண மனிதர்கள் போல், சாலையில் ஜாலியாக செல்வது தான். ஆனால், தமிழ்நாட்டில் அது அவர்களுக்கு சாத்தியமில்லாதது என்பதால், வெளிநாட்டிற்கு சென்று அங்கு ஜாலியாக சாலையில் உலா வர விரும்புவார்கள்.

அந்த வகையில், நடிகர் அஜித்தும் தன்னுடைய மனைவி ஷாலினி உடன், ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்ற நிகழ்வு, இணையத்தில் வைரலாய் தெறிக்கிறது.

கலைத்துறையில் விடா முயற்சி, கார் ரேஸில் விடா பயிற்சி; அட்டகாசமாய் கலக்குங்க தல.!