லப்பர் பந்த படத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் லப்பர் பந்து என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலா சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி இதுவரை 23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இப்படியான நிலையில் இந்தப் படத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.