ஓடிடியில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அதுதவிர, என்னென்ன படங்களெல்லாம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்ப்போம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, வைபவ், பிரேம்ஜி நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் கோட், திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டது.

மேலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இந்த நிலையில், கோட் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி அப்படம் இன்று (அக்டோபர் 3) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன திரைப்படம் போட். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தை ஒரே படகில் நடக்கும்படியாக எடுத்திருந்தார் இயக்குனர் சிம்புதேவன். இப்படத்தில் யோகிபாபு உடன் கெளரி கிஷான், பிக்பாஸ் மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

டெட்பூல் மற்றும் வால்வரின் திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர நெட்பிளிக்ஸில் Love Is Blind வெப் தொடரின் 7வது சீசன் வெளியாகி இருக்கிறது. மேலும் Heart stopper என்கிற வெப் தொடரின் மூன்றாவது சீசன் இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதுமட்டுமின்றி House Of Spoils என்கிற படம் அமேசான் பிரைமிலும், Hold Your Breath திரைப்படம் ஹுலுவிலும், SalemsLot HBO மேக்ஸிலும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அக்டோபர் 4-ந் தேதி Finally Dawn திரைப்படம் Lion Gate Play ஓடிடி தளத்திலும், Its Whats Inside நெட்பிளிக்ஸிலும், The Tribe அமேசான் பிரைமிலும் ரிலீசாகிறது.

தெலுங்கில் நிவேதா தாமஸ் நடித்த 35 திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதோடு கலிங்கா, பாலு கானி டாக்கீஸ் ஆகிய தெலுங்கு படங்களும் ஆஹா ஓடிடி தளத்தில் அக்டோபர் 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளன. இந்தியில் Ctrl நெட்பிளிக்ஸிலும், கூகி அமேசான் பிரைமிலும், தி சிக்னேச்சர் ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

அப்புறமென்ன.. பாருங்க, பாருங்க.. பார்த்துக்கிட்டே இருங்க.!