இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வழக்கம்போல் கயல் சீரியல் முதலிடத்தில், சிங்க பெண்ணே இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் ஐந்தாவது இடத்தில் ராமாயணம் தொடரும் இடம் பிடித்துள்ளது.
ஆறாவது இடத்தில் அன்னம் சீரியல் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஆறு இடத்தை சன் டிவி சீரியல் பிடிக்க ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை உள்ளது.
எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்பதாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் பத்தாவது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலும் இடம் பிடித்துள்ளது
இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
