பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் மூன்று பூகம்பம் டாஸ்க் நடைபெற்ற நிலையில் இதன் விளைவாக இரண்டு பேர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளனர். அதே சமயம் இருவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே செல்ல உள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் அவரை ஷேவ் செய்து பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோரை வெளியேற்றியுள்ளது விஜய் டிவி.
இருவரில் ஒருவர் இன்றைய எபிசோடில் வெளியேற்றப்படுவார் எனவும் மற்றொருவர் நாளைய எபிசோட்டில் வெளியேற்றப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.