சி.பிரேம் குமார் இயக்கத்தில் மெட்ராஸ் என்டர்ப்ரைஸஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 96.

முழுக்க முழுக்க காதல் படமாக உருக்காகியுள்ள இந்த படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ஆனாலும் படம் சில சிக்கல்களை சந்தித்த பின்னரே ரிலீஸாகியுள்ளது.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருந்த கடன் சுமையால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என சிலர் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தின் ரிலீஸிற்காக தயாரிப்பாளரின் கடனில் இருந்து ரூ 4.5 கோடியை தான் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். அதன் பின்னரே படம் பிரச்சனைகள் தீர்ந்து வெளியானதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் இந்த செயலை கண்டு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் உண்மையான தயாரிப்பாளர் செல்வன் விஜய் சேதுபதி தான் எனவும் கூறி வருகின்றனர்.