நடிகை அமலா பிரபல தொலைக்காட்சி சேனலில் உள்ள சின்னத்திரை சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இந்த தகவலால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 80ஸ் காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா. கமல் ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் பல ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த அமலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான கணம் என்ற சூப்பரான திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

அதன்படி பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் உரிமை என்ற தலைப்பு கொண்டுள்ள புதிய சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அமலா நடிக்கவுள்ளார். இந்த தகவலால் சீரியல் பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அமலாவை சின்னத்திரையில் பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.