களத்துல எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம் ஆனால் பொங்கல் வின்னர் வாரிசு தான் என பிரபல நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.
இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை பெற்று வருகின்றன. இருந்த பதிலும் பொங்கல் வின்னர் யார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாரிசு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் களத்துல எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம் ஆனால் பொங்கல் வின்னர் வாரிசு தான், ஆடியன்ஸ் டிக்ளர் பண்ணிட்டாங்க என பதிவு செய்து பொங்கல் வின்னர் வாரிசு என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.