நயன்தாராவுடனான காதல் ஆறு வருடத்தை கடந்து விட்டதாக அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

6 Years Love of Vicky and Nayanthara : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த, காத்துவாக்குல 2 காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சிம்பு பிரபுதேவா உள்ளிட்டோரிடம் காதல் வயப்பட்டு பின்னர் அவர்களை பிரிந்த இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆறு வருடத்தை கடந்த விக்கி, நயன்தாரா காதல் - அழகிய புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்தது. இதனை நடிகை நயன்தாரா நெற்றிக்கண் படத்திற்காக விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் தங்களது காதலும் 6வருடத்தை கடந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திடீரென அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்! | Arasi Shooting Spot