தளபதி 67 படத்தில் மட்டும் ஆறு வில்லன்கள் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 6 வில்லன்கள்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? தளபதி 67 பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நாயகியாகவோ அல்லது வில்லியாகவோ நடிக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 6 வில்லன்கள்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? தளபதி 67 பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இந்த நிலையில் மொத்தம் ஆறு வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரித்திவிராஜ் என இரண்டு வில்லன்களை நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மற்ற 4 வில்லன்களுக்கான நடிகர்களை தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.