ஆறு நாள் லியோ வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் லியோ.

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் படம் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் நாள் இந்த படம் 148 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து படத்தின் வசூல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

தளபதி விஜய் ஒவ்வொரு நாளும் வசூலை வெளியிட வேண்டாம் வார இறுதியில் வெளியிட்டால் போதும் என தயாரிப்பில் நிறுவனத்திற்கு கண்டிஷன் போட்டதே இதற்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது ஒரு வாரம் முடிந்த நிலையில் நேற்று லியோ திரைப்படம் இதுவரை 460 கோடியை கடந்து வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஜய் பாடின கண்டிஷன் உன்ன தான் போல அதனால் தான் ஒரு வாரம் கழித்து வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளனர் என கருத்து கூறி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் படைக்காத வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து காட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.