ஒவ்வொரு வருடமும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீசாகாமல் இருக்காது. குறிப்பாக இது போன்ற பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வெளியாகும்.

இந்த வருட தீபாவளிக்கும் விஜயின் சர்கார், தல அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் வெளியாக இருந்தன. ஆனால் விஸ்வாசமும், NGK-வும் விலகி கொண்டதால் சர்கார் மட்டுமே சோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் போட்டிக்கு நாங்க இருக்கோம் என தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, பில்லா பாண்டி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகின.

இதனையடுத்து சமீபத்தில் சசிகுமாரின் நாடோடிகள் 2 படமும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் பிடித்துள்ளன. துணிந்து களமிறங்க போவது யார்? ரேஸில் இருந்து விலக போவது யார் என்பதை எல்லாம் தீபாவளி நெருங்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.