தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய பட வேளைகளில் பிஸியாக இருந்து வந்தாலும் அதே சமயம் புது படத்தை இயக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்.

தேனாண்டாள் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள படத்தில் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனையடுத்து தற்போது மற்றொரு நாயகியாக துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்த அணு இம்மானுவேல் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.