விஜய் டிவியில் அடுத்தடுத்து நான்கு சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு என மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது விஜய் டிவி. ஆனால் கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவிக்கு டப் கொடுத்து இரண்டாம் இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது ஜீ தமிழ்.

இதன் காரணமாக ஓடாத சீரியல்களை ஒட்டு மொத்தமாக முடித்துவிட விஜய் டிவி முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியாக நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. சிவகாமி ஒரு கொலையை செய்து விட்ட நிலையில் அந்த கேசை விசாரிக்கும் பொறுப்பு சந்தியாவுக்கு வருகிறது. இதனால் சந்தியா இதை எப்படி கையாள போகிறார் என்பதுடன் இந்த சீரியல் முடிகிறது.

அதற்கு அடுத்தபடியாக ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலில் பார்த்திபன் மற்றும் காவியா என இருவரும் ஒன்று சேர்ந்து விட்ட நிலையில் தற்போது திருமண வைபோகம் நடந்து வருகிறது. இதோடு இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜீவா, கண்ணன் என இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியே சென்றுள்ள நிலையில் இந்த குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் சீரியல் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மூன்று சீரியல்களை தொடர்ந்து நான்காவதாக தமிழும் சரஸ்வதியும் சிரியல் முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்துள்ள தமிழ் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்தது இந்த சீரியலும் முடிவுக்கு வர உள்ளது.

இந்த தகவலால் இந்த சீரியல்களை விரும்பி பார்த்து வரும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.