3rd Test Indian Team
3rd Test Indian Team

3rd Test Indian Team – மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ், அணி தங்களின் முக்கியமான விக்கெட்களை இழந்து உள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தல ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளார்.

இந்த நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கி முதல் இன்னிங்சை இந்திய அணி 443 ரன்கள் எடுத்து இருந்தது.

விராட் மற்றும் சர்மா அரைசதம் அடித்தனர். புஜாரா சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆஸ், அணி தங்களில் முக்கியமான ஆட்டகாரர்களை இழந்த நிலையில் சற்று தடு மாற்றத்துடன் களத்தில் இருந்தது.

இன்று தொடங்கிய ஆட்டதில் ஆஸ், அணிக்கு இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் சரியான சவால்களை கொடுத்தனர்.

குறிப்பிடும் வகையில் பும்ரா ஆஸ்., அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்., அணி வீரர்களை இந்திய அணி பந்து வீச்சாளார்கள் அதிக ரன் எடுக்க விடாமல் சொற்ப ரன்களிலயே வெளியேற்றினார்கள்.

4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் இடைவெளி வந்தது. பிறகு தொடர்ந்த ஆஸ்., ஆட்டத்தை பும்ரா மற்றும் ஜடேஜா இருவரும் விக்கெட்களை எடுக்க தேநீர் இடைவெளியில் ஆஸ், அணி 6 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து இருந்தது.

விக்கெட் இழந்த நிலையில் ஆஸ்., அணி நிதானமாக விளையாடி வந்த ஆஸ்., அணி இறுதியில் 151-க்கு ஆல் அவுடானது.

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழந்து 28 ரன் எடுத்து உள்ளது.

புஜரா மற்றும் விராட் ரன் எதுவும் எடுக்காமலும், ஹனுமா 13 ரன் மட்டுமே எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அகர்வால் 15 ரன்களுடனும், ரஹானேவும் களத்தில் உள்ளார்கள்.