
3rd Test – Hardik Pandya – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆஸ், எதிராக டி-20 போட்டியை சமன் செய்ததை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்., அணியும் வெற்றி பெற்று இதுவ்ரை 1-1 என்று சம நிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் யார் விளையாட இருக்கின்றனர் என்ற விவரம் வெளியாகி இருக்கியது.
ஆஸ்., மற்றும் இந்தியா இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது காயம் அடைந்த பிரித்வி இது வரை முழுமையாக குணமடையாமல் இருக்கவே அவரை பிசிசிஐ நீக்கி இருக்கின்றது.
மேலும், ஆசிய கோப்பையில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்ட பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேலும், இந்தியாவின் 2-வது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படும் ராகுல் மற்றும் முரளி விஜய்யின் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததால், புதிய தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கின்றது.
மற்றும் இவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் தொடர்வது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது.