
விஜய் டிவியில் அடுத்தடுத்து மூன்று சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் தான் பாரதி கண்ணம்மா 2 சீரியல் முடிவுக்கு வந்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 3 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆமாம், மாலை நேரத்தில் ஈரமான ரோஜாவே 2, இரவு நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மதிய வேளையில் காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்கள் தான் நிறைவு பகுதியை நெருங்கி வருகிறதாம்.
இந்த மூன்று சீரியல்களுக்கும் நல்ல ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் வெளியான இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
