வாத்தி படத்தில் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் வாத்தி.

தெலுகு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பழைய கதையாக இருந்தாலும் அதன் திரை கதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பல மாற்றியமைக்கப்பட்டு ரசிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

முதல் நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் மூன்று நாள் முடிவில் கிட்டத்தட்ட 43 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.