லோகேஷ் கனகராஜின் பைட் கிளப் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

3 Days Collection of Fight Club Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஹிட்டான படங்களை கொடுத்து வரும் இவர் ஜி ஸ்கொயர் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக பைட் கிளப் என்ற படத்தை இயக்கியுள்ளார். 

உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கி உள்ளார். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

இந்த நிலையில் மூன்று நாளில் மொத்தம் ஐந்து கால் கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஃபைட் கிளப் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.