
டாடா படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்ததை தொடர்ந்து லிப்ட் என்ற படத்தில் நடித்து வெற்றி கண்டார்.
இந்த படத்தை தொடர்ந்து டாடா படத்தில் நடித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த படம் வித்தியாசமான கதைகளத்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படத்தின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய பட்ஜெட்டில் வெளியான இந்த படம் முதல் மூன்று நாளில் ரூபாய் ஆறு கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.