2nd Test - India Lost
2nd Test - India Lost

2nd Test – India Lost  – ஆஸ்., அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்யாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உள்ளது.

கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்., அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்., அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து தனது எல்லா விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 123 ரன் சேர்த்தார். தொடர்ந்து 43 ரன்கள் முன்னிலையுடன் அடுத்ததாக களமிறங்கிய ஆஸ், அணி 243-க்கு ஆல் அவுடானது.

287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்சியாகவும், ஆஸ்., அணிக்கு சிறப்பாகவும் அமைந்தது.

ராகுல் தனது 4-வது பந்தில் அவுடாகி வெளியேறியதை தொடர்ந்து அடுத்ததாக களமிராகியவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இறுதியில் 140 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் இப்பொழுது சம நிலையில் இருக்கிறது.

அடுத்ததாக 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.