2pointo trailer

2PointO Trailer : 2 பாயிண்ட் ஓ படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், ப்ரோமோ வீடியோஸ் ஆகியவை ஏற்கனவே இனையத்தில் வெளியாகி மிக பெரிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இதற்காக சென்னையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது விழா வெற்றிகரமாக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக லேட்டஸ்ட் தொழிநுட்ப வளர்ச்சிகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் டிரைலரும் மிக பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை மிரள வைத்து வருகிறது. இதோ நீங்களும் பாருங்க

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.