2 Point O Records

2 Point O Records : 2 பாயிண்ட் ஓ படம் ரிலீஸுக்கு முன்னரே ரூ 370 கோடி வசூல் சாதனை செய்து திரையுலகையே மிரள வைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

லைகா நிறுவனம் சுமார் ரூ 650 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருப்பதாக கூறப்படும் இந்த படம் நாழி மறுநாள் அதாவது நவம்பர் 29-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னதாகவே ரூ 370 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அது எப்படி என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம் வாங்க

படத்தின் சாட்டிலைட் உரிமம் – ரூ 120 கோடி
டிஜிட்டல் உரிமை – ரூ 60 கோடி
வடக்கு பக்க உரிமை ( north belt rights ) ரூ. 80 கோடி
ஆந்திரா/ தெலுங்கானா உரிமை – ரூ 70 கோடி
கர்நாடகா உரிமை – ரூ 25 கோடி
கேரளா உரிமை – ரூ 15 கோடி

இவ்வாறாக தற்போது வரை இந்த படத்திற்கு ரூ 370 கோடி வசூல் கிடைத்துள்ளது. படம் ரிலீஸுக்கு பிறகு வசூலில் என்னென்ன சாதனை படைக்கும்.

உலகளாவிய அளவில் படத்திற்கு வசூல் எவ்வளவு கிடைக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.