2 Point O Controversy

2 Point O Controversy : 2.O படத்தால் ரூ 200 கோடி நஷ்டம் என பிரபலம் ஒருவர் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் 2 பாயிண்ட் ஓ.

கடந்த நவம்பர் 29-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிய இந்த படத்தை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டை சேர்ந்த பிரபலமான கமால் ஆர் கான் என்பவர் 2 பாயிண்ட் ஓ படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ 200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் போது இதனை எப்படி வெற்றிப்படம் என கூறுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி இவர் சர்ச்சையான டீவீட்டை பதிவிட்ட பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னை பிளாக் செய்து விட்டதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கமால் ஆர் கான் என்பவரின் இந்த சர்ச்சை பதிவு திரையுலகில் பரபரப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here