2 Point O Collection

2 Point O Collection Before Release : 2 பாயிண்ட் ஓ படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ரூ 120 கோடி வசூல் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள இந்த படம் செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பேச உள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் ரூ 650 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் தமிழக தியேட்டர் ரைட்ஸ் ரூ 120 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ரூ 120 கோடி வசூல் செய்த ஓர் படம் 2 பாயிண்ட் ஓ தான் என்ன கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.