
2.O Shankar Vs Rajini : ஷங்கர் மட்டும் அன்னைக்கு ரஜினி பேச்சை கேட்டு இருந்தால் அவ்வளோ தான் இன்னைக்கு 2.O படமே ரிலீசாகி இருக்காது என ரஜினி ரசிகர்களே ஷங்கர் மீது பெருமை கொள்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2 பாயிண்ட் ஓ ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பாராட்டை பெற்று வருகிறது.
படையப்பா படத்தில் உனக்கு வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு போகல என்ற வசனத்தை தற்போது தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பால் நிரூபித்துள்ளார்.
படத்தை பார்த்து பிரம்மித்து போன ரசிகர்கள் யாரும் 67 வயது என கூற மாட்டார்கள்.
ஆனால் இதே ரஜினிகாந்த் தான் என்னால் நடிக்க முடியவில்லை. என் உடல் ஒத்துழைக்கவில்லை என கூறி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் இதுவரை நான் வாங்கியுள்ள பணத்தையும் திருப்பி கொடுத்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் ஷங்கரும் லைகா நிறுவனம் ரஜினியின் பேச்சை கேட்காமல் நீங்க தான் சரியான ஆள் என கூறி நடிக்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நல்ல வேலை ஷங்கர் சார் அன்னைக்கு ரஜினியோட பேச்சை கேட்டிருந்தா அவ்ளோ தான் இன்னைக்கு 2.O படமே வந்திருக்காது என கூறி ஷங்கருக்கு நன்றி கூறி வருகின்றனர்.