2.O Day-2 Collection

2.O Day-2 Collection :

2.O படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் நாளை போலவே இரண்டாம் நாளிலும் இப்படம் தெறிக்க வசூலில் வேட்டையாடியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் 2.O.

இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 2.64 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சேர்த்து ஒரே நாளில் ரூ 100 கோடி வசூலை தாண்டி இருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸை ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து இரண்டாம் நாள் வசூல் நிலவரமும் கிடைத்துள்ளது.

ஆம், 2 பாயிண்ட் ஓ படம் இரண்டாம் நாளில் மட்டும் ரூ 2. 13 கோடி வசூல்.செய்துள்ளது மொத்தமாக சென்னையில் மட்டும் ரூ 4.77 கோடி வசூல் செய்துள்ளது.

இருப்பினும் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் குறைந்து இருப்பது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.