தளபதி விஜயின் வேட்டைக்காரன் திரைப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தமன் இசையில் அண்மையில் வெளியான இரண்டு சிங்கிள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை எதிரவைத்து வரும் நிலையில் தளபதி விஜய் – அனுஷ்கா நடிப்பில் கடந்த 18.12. 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குனர் பிரபு சிவன் இயக்கத்தில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த விஜயின் சண்டைக் காட்சி, காமெடி மற்றும் அதிர வைக்கும் பஞ்ச் டயலாக் எல்லாம் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு இணையதளத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.