இதுவரை நாமினேஷன் பட்டியலில் ஐவர் இடம் பெற வெளியேறுவது யார் என்பது குறித்த பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் ஜோவிகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, மணிச்சந்திரா, தினேஷ், நிக்சன் என ஐவர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை பதிவாகியுள்ள ஆரம்ப கட்ட ஓட்டுகள் நிலவரப்படி நிக்சன் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக குறைவான ஓட்டுக்களுடன் நான்காவது இடம் பிடித்துள்ளார் விசித்ரா.
இதனால் இந்த ஐவரில் வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. நிச்சயம் நிக்சன் தான் வெளியேற்றப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.