டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் 12 பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக தடம் பதித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடந்து முடிந்ததை தொடர்ந்து சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. பல வகையான ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வாகிய நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 12 போட்டியாளர்கள் தேர்வாகினர்.

இந்த வாரம் அறிமுக சுற்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் 12 சாமானிய போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. ஜான் எட்வின் – ரிஷா
  2. நாகராஜ் – ரியா விஸ்வநாதன்
  3. ஆனந்த் – நக்ஷத்திரா
  4. சுரேஷ்குமார் – ஹேமா
  5. பூர்ணிமா – ராஜா வெற்றி வசந்த்
  6. இப்ராஹிம் – அக்ஷிதா
  7. குரு – ரியா சௌதாரி
  8. கௌரி கோபன் – விவேக் ராஜகோபால்
  9. பிரின்ஸ் சேவியர் – காயத்ரி ஹேமா
  10. ஸ்வாதி நாயர் – சபரி
  11. பிரியதர்ஷினி – உதய்
  12. அக்ஷதா – சூப்பர் டீலக்ஸ் நவீன்

இந்த 12 ஜோடிகள் மக்கள் மனதை கவர போவது எப்படி? என்பது குறித்து அறிய டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 2 நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.