1100 Scheme in Tamilnadu

1100 என்கிற எண்ணின் மூலம் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று துவக்கப்பட்டது.

1100 Scheme in Tamilnadu : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து பல அதிரடி திட்டங்களை அமலுக்கு கொண்டு வருகிறார்.

அந்த வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை, உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனடியாக தீர்க்கப்படுவதற்காக உருவான திட்டம் தான் இது.

1100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவித்தால், பிரச்னைகள் உடனே தீர்க்கப்படும் திட்டமான முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார்.