Vinayagar Prayer

விநாயகருக்கு முன்பாக தலையில் குட்டிக்கொண்டு… தோப்புக்கரணம் போடுவதின் காரணங்கள்.

● தோப்புக்கரணம் தோன்றிய வரலாறு:

விநாயகரின் கோபத்தை குறைக்க மாமா மகாவிஷ்ணு தனது காதை பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுந்தார். இதனால் விநாயகர் மகிழ்ச்சியடைந்தார். அதன் நினைவாகவே இன்றும் தோப்புக்கரணம் போடுவதாக கூறுகிறது புராண கதை.

● தோப்புக்கரணம் போடுவதில் மறைந்திருக்கும் உண்மை:

* வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்புக்கரணம் போட வேண்டும்.

* தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.

* காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கிறது.

* தோப்புக்கரணம் போடுவதனால்
மூளைக்கு ரத்தோட்டம் சீராகி மனதில் ஏற்படும் மன அழுத்தம் சீரடையும். மனச்சோர்வு நீங்குவதோடு உடலின் கை கால்களின் தசைகள் வலிமையடையும்.

● தலையில் குட்டிக்கொள்ளும் பழக்கம்
தோன்றிய வரலாறு:

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.
அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார்.
இதைப்பார்த்து விநாயகர் கோபம் தணிந்து மகிழ்ச்சியடைந்தார். அன்று முதல் விநாயகரின் முன்பாக தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

● தலையில் குட்டிக் கொள்வதின்
பின் இருக்கும் அறிவியல் உண்மை:

இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் இரு கைகளாலும் ஒரே தடவையாக 3 முறை குட்டிக்கொள்வதனால் மூளை சுறுசுறுப்படையும்.

* உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது.

* உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.

கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்புகரணம் செய்யும் போதும் “ஒம் கணேசாய நம” என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.