
பார்வதி, இங்கு நடந்த அனைத்துசம்பங்களும் அபசகுணமானது .இதற்கு காரணம் நான் அணிந்திருக்கும் உங்களது பரம்பரை செயின் என்று எழுதி , அந்த கடித்துடன் சேர்த்து செயினையும் அவிழ்த்து வைத்து விட்டு வீட்டை விட்டு வெயியேறுகிறாள்.
பார்வதியின் கடிதமும், செயினும் அகிலா கண் முன் தெரிய வேண்டும் என்று டேபிளில் வைத்து விடுகிறாள் பார்வதி. ஆனால் கடிதமும், செயினும், வனஜாவின் கண்ணில் பட்டு விடுகிறது.
அவ்வளவு தான் வனஜா அனைவரையும் கத்தி, கூப்பிட்டு ஆர்ப்பாட்டம் செய்து விடுகிறாள். பார்வதியை, பொறுப்பில்லாதவள், பரப்பரைசெயினுக்கு உண்டான மரியாதைத் தெரியாதவள். என்று வஞ்சம் கலந்த நச்சு சொற்களால் பேசுகிறாள்.
பார்வதி வீட்டைவிட்டு வெளியேறிய விசயத்தை சுந்தரத்திடம் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் பேசுவதைக் கண்டு எரிச்சலடைந்த அகிலா , நான் தனிமையில் இருக்க விரும்புகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்று விடுகிறார்.
அடுத்து, பார்வதி, மும்பையில் உள்ள ஆதி தங்கியுள்ள ஹோட்டலை வந்து அடைகிறாள் . ஆதியும், ஷியாமும் பார்வதியை பார்த்த ஆனந்தத்தில் திகைத்து நிற்கின்றனர்.
ஆதி, பார்வதியை பார்த்து, நீ எப்படி மும்பை வந்தாய்., மேலும் நீ கழுத்தில் அணிந்திருந்த பரம்பரை செயின் எங்கே? என்று வரிசையாக கேள்விகளை கேட்கிறார். அதற்கு பார்வதி ,சின்ன ஐய்யாவிடம் ஏதோ ஏதோ சொன்னேன்.
அவர் தான் நான் மும்பை வர, உதவினார். நான்,உங்கள் பரம்பரை செயினை அணிந்திருந்ததால் தான், உங்களுக்கு தலையில் அடிப்பட்டது. பல அபசகுணங்களும் தொடர்ந்து நிகழ்ந்தன, என்கிறாள். ஷியாம் இடையில் குறுக்கிட்டு இதற்கெல்லாம் நீ காரணம் அல்ல, அந்த நந்தினி தான் காரணம் என்கிறார்.
மேலும் இன்று துப்பாக்கியால் கூடச் சுட்டால், ஆனால் உன் போனால் ஆதி தப்பித்துக் கொண்டார் என்கிறார். பார்வதி ஆத்திரத்தில் நந்தினியை,ஏன் சும்மா விட்டிர்கள் என்று கேட்கிறாள். இதற்கிடையில் திருப்புமுனையாக இவர்கள் பேசுகின்ற அனைத்தையும் அகிலா கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.
இனி கதையில் அடுத்த அடுத்த பகுதிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.ஆதி – பார்வதியின் காதலை அறிந்த அகிலாவின் அடுத்த முடிவு என்ன? ஆதியைக் கொலை செய்ய முயற்சித்த நந்தினியை, அகிலா எப்படி பழி வாங்குவாள்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.